‘சக்தித் திருமகன்’ கதை திருட்டு சர்ச்சை – “உழைத்து எழுதியது தான் !” : இயக்குனர் அருண் பிரபு விளக்கம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான ‘சக்தித் திருமகன்’ படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், அக்டோபர் 24ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் கதை திருடப்பட்டதாக சுபாஷ் சுந்தர் என்ற நபர் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தன்னிடம் இருந்த கதை ‘சக்தித் திருமகன்’ கதையுடன் பல ஒற்றுமைகள் உள்ளதாகவும், அந்தக் கதையை மூன்று வருடங்களுக்கு முன் எழுதி Dream Warriors Pictures நிறுவனத்திற்கே அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “அருண் பிரபுவின் முதல் படம் ‘அருவி’யை Dream Warriors தான் தயாரித்தது. எனவே, எனது கதை அங்கிருந்து கசிந்திருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன். என் கதை 2022ஆம் ஆண்டில் ‘Copyrights of India’யில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. தேவையானால் வழக்குத் தொடர உள்ளேன்,” என சுபாஷ் சுந்தர் பதிவு வெளியிட்டுள்ளார்.

இக்குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இயக்குனர் அருண் பிரபு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி, வணக்கம்,” என்று சுருக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version