ஷாருக்கானுக்கு படப்பிடிப்பின்போது காயம் – அமெரிக்காவில் சிகிச்சை!

‘பாலிவுட் பாட்ஷா’ மற்றும் ‘கிங் கான்’ என அழைக்கப்படும் பிரபல நடிகர் ஷாருக்கான், சமீபத்தில் நடைபெற்று வந்த ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியின் படப்பிடிப்பின்போது காயம் அடைந்துள்ளார்.

ஷாருக்கானுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மூத்த மகன் சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற கனவில் பயிற்சி பெற்று வருகிறார்.

இளைய மகன் தற்போது பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.

மகள் சுஹானா கான், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நடிப்பு பள்ளியில் கல்வி முடித்துள்ளார்.

‘பதான்’ படத்துக்குப் பிறகு, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் வெற்றிபெற்றது.

தற்போது அவர், இயக்குநர் சுஜோய் கோஷ் இயக்கத்தில் உருவாகும் ‘தி கிங்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனம் ‘Red Chillies Entertainment’ தயாரிக்கிறது.

படத்தில் ஷாருக்கானுடன் அவரது மகள் சுஹானா கானும் கதாநாயகியாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க தந்தை-மகள் இருவரும் பங்கு வகிக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என கூறப்படுகிறது.

மும்பையில் நடைபெற்று வந்த ஒரு முக்கியமான ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின் போது, ஷாருக்கானுக்கு தசை பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதன் காரணமாக, ‘தி கிங்’ படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version