சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 58) என்பவர், பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராகவும், பாஜக தென்காசி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

2023 ஆம் ஆண்டு, தனியாக இருந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கி காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

தன்னுடன் நடந்த கொடுமையை தைரியமாக பெற்றோரிடம் கூறிய சிறுமியின் உறவினர், அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய தவறியதால், சிறுமியின் பெற்றோர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். அதனையும் தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, நீலகண்டன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version