கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மேம்பட்ட ஸ்ட்ரோக் மையம் சார்பில், ‘ஸ்ட்ரோக் மேலாண்மையின் அடிப்படைகள் மற்றும் முன்னேற்றங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் எஸ்.ஆர்.எச் ஸ்ட்ரோக் கருத்தரங்கு நடைபெற்றது. ஸ்ட்ரோக் சிகிச்சை, கண்டறிதல் மற்றும் அவசர பராமரிப்பு ஆகியவற்றில் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து பலதுறை நிபுணர்கள் இதில் உரையாற்றினர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் துறை – மேம்பட்ட ஸ்ட்ரோக் மையம் சார்பில், கோவை ரெசிடென்சி டவர்ஸில் இந்தச் சிறப்பு எஸ்.ஆர்.எச் ஸ்ட்ரோக் கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவ மேம்பாட்டில் மருத்துவமனையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தக் கருத்தரங்கு வலியுறுத்தியது.
இந்த நிகழ்வு ஸ்ட்ரோக் கண்டறிதல், சிகிச்சை, அவசர பராமரிப்பு மற்றும் நீண்டகால மேலாண்மை ஆகிய துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றிய ஆழமான பார்வையையும் நடைமுறை வழிகாட்டுதல்களையும் வழங்கியது. இதில் நரம்பியல் நிபுணர்கள், ஸ்ட்ரோக் வல்லுநர்கள், இன்டர்வென்ஷனல் நிபுணர்கள் மற்றும் மூத்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல துறை நிபுணர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கு காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சிறப்பு உரையாற்றியவர்களின் தலைப்புகள்:
டாக்டர் என்.வேதநாயகம்: “அக்யூட் இஸ்கீமிக் ஸ்ட்ரோக்-இல் த்ராம்போலைசிஸ்”டாக்டர் கே.அசோகன்: “இஸ்கீமிக் ஸ்ட்ரோக்கின் அரிய காரணங்கள்”டாக்டர் கே.அருணா தேவி: “இஸ்கீமிக் ஸ்ட்ரோக்கில் என்டோவாஸ்குலர் சிகிச்சை” முக்கிய தொழில்நுட்பங்கள்: துவக்க விழாவிற்குப் பிறகு நடைபெற்ற அமர்வுகளில், டாக்டர் ஆர்.லக்ஷுமி நரசிம்மன் மற்றும் டாக்டர் ஆர்.மணிவாசகன் ஆகியோர் “ஸ்ட்ரோக் மேலாண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI)” என்ற தலைப்பில் உரையாற்றினர்.
பிற்பகல் நிகழ்வுகளில், இரண்டாம் நிலை ஸ்ட்ரோக் தடுப்பில் ஆன்டிபிளேட்லெட் சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அபாய காரணி மேலாண்மை, அக்யூட் ஸ்ட்ரோக்கில் அறுவை சிகிச்சை தலையீடு போன்ற தலைப்புகளில் டாக்டர் பிரகாஷ், டாக்டர் கே.கே.பிரசெத் மற்றும் டாக்டர் ஆர்.முரளி ஆகியோர் விளக்கமளித்தனர். உலகளவில் ஸ்ட்ரோக் முக்கியமான ஊனமுற்றலும், மரணத்திற்கும் காரணமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இத்தகையக் கருத்தரங்குகள் மூலம் ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது சிறந்த மருத்துவ மைய நிலையினை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அங்கீகாரம்: ராமகிருஷ்ணா மருத்துவமனை, இந்தியாவின் குவாலிட்டி அக்ரெடிடேஷன் இன்ஸ்டிட்டியூட் (QAI) மூலம் மேம்பட்ட ஸ்ட்ரோக் மையமாக அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது மருத்துவமனையின் உயர்ந்த தரச்சான்றுகளையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் உறுதிசெய்கிறது.துவக்க விழாவில் மருத்துவமனையின் தலைமைச் செயற்குழுவினர் ஆர். சுந்தர் (நிர்வாக அறங்காவலர்), எஸ்.நரேந்திரன் (துணை நிர்வாக அறங்காவலர்), சி.வி.ராம்குமார் (தலைமை செயல் அதிகாரி) உட்படப் பலர் பங்கேற்றனர். நிறைவாக டாக்டர் கே.அசோகன் நன்றி கூறினார்.
