“விஜயகாந்த் வந்தபோது ஏற்படாத எழுச்சியா ?” – நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்த சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விஜயின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்துள்ளார். திரைத்துறையைச் சேர்ந்த விஜய் அரசியலுக்கு வந்திருப்பது குறித்து விமர்சனம் எழுப்பிய அவர், “விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது கூட இதுபோன்ற எழுச்சி ஏற்படவில்லை” என்று விமர்சித்துள்ளார்.

நிருபர்களிடம் சீமான் பேசியதாவது :
“விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். ஆனால் அவரிடம் என்ன தனித்துவமான கொள்கை இருக்கிறது ? திரும்பவும் அதே ‘அண்ணா வழி’, ‘பெரியார் வழி’ என்றே சொல்கிறார்கள். அப்படி என்றால், அதே வழியில் ஸ்டாலின், எடப்பாடி ஆகியோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். 60 வருடமாக அரசியல் அதே வழியில் வந்துகொண்டே இருக்கிறது. இதிலே புதியதாய் என்ன இருக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “திமுகவுக்கு வாக்களிக்கிறார்கள், ஏனெனில் மறுபடியும் அதிமுக வரக்கூடாது என்பதே காரணம். இதுவே போன்றது – பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயை கல்யாணம் செய்வதுபோல,” என்று அவர் விமர்சனமாகக் கூறினார்.

தமிழ்நாட்டில் வாக்குரிமை, வேலை திட்டம் குறித்து :
வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்கும் முயற்சிகளை சீமான் எதிர்த்தார். “நான் இருக்கும் வரை தமிழ்நாட்டில் அவர்களுக்கு வாக்குரிமை வழங்க முடியாது. தமிழ்நாட்டை ஹிந்தி பேசும் மாநிலமாக மாற்றும் முயற்சி நடக்கிறது,” என்றார்.

100 நாள் வேலை திட்டம் குறித்தும் விமர்சித்த சீமான், “அதில் நடப்பட்ட மரக்கன்றுகள் எத்தனை வளர்ந்துள்ளன? மக்களின் உழைப்பை ஆற்றலாக மாற்ற தவறிவிட்டார்கள்,” எனக் குறிப்பிட்டார்.

மீடியா மற்றும் விஜய் பற்றி :
“திரை புகழை வைத்துக் கொண்டு அவர்களை மீடியா அதிகமாக காட்டுகிறது. நம்மைப் பற்றி காட்டும் அளவுக்கு அவர்களை அதிகம் காட்டுகிறார்கள். அது தவறு இல்லை. ஆனால் அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பதை மக்கள் கேட்க வேண்டும். விஜயகாந்த் வந்தபோதும் இதுபோன்ற அளவுக்கு எழுச்சி ஏற்படவில்லை” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version