ஈயத்தை தங்கமாக மாற்றிய விஞ்ஞானிகள் – இப்போது தங்கம் தயாரிக்க முடியுமா ?

ஜெனீவா: ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையமான CERN-இல் உள்ள உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியான Large Hadron Collider (LHC)-இல் பணியாற்றும் விஞ்ஞானிகள், ஈய அணுக்களை அதிவேகத்தில் மோதச் செய்து மிகக் குறுகிய நேரத்திற்கு தங்க அணுக்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆய்வில், இரண்டு ஈய அணுக்களும் ஒருவருக்கொருவர் மோதாமல் மிக நெருக்கமாக செல்லும் போது, சக்திவாய்ந்த மின்காந்த புலங்கள், அந்த ஈயத்தை தங்கமாக மாறச் செய்துள்ளன. இதற்காக ALICE எனப்படும் கூட்டு முயற்சி குழு புதிய அணுவியல் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.

ஆனால், விஞ்ஞானிகள் இதை தங்கத்தை உற்பத்தி செய்வதற்காகவே செய்ததில்லை என்றும், இது இயற்கையில் நடக்கும் நுண்ணிய அணுவியல் மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு தங்கம் உருவானது?
2015 முதல் 2018 வரையிலான ஆய்வுக் கட்டத்தில், சுமார் 86 பில்லியன் தங்க அணுக்கள் உருவாக்கப்பட்டன. இது அளவில் கேட்கப் பெரிதாக இருந்தாலும், அதன் மொத்த எடை சுமார் 29 பைக்கோகிராம் (trillion மடங்கு ஒரு கிராமுக்கு குறைவானது) மட்டுமே.

மேலும், உருவாகும் தங்க அணுக்கள் மிகவும் குறுகிய காலமே நிலைத்து இருந்து, சில நொடிகளுக்குள் அழிந்துவிடுகின்றன. தற்போது இந்த முறையில் வணிக ரீதியாக தங்கம் உருவாக்க முடியாத நிலையில் உள்ளது.

எதிர்கால அபாயம்?
தங்கத்தை இப்படி எளிதாக உருவாக்கும் வழி தொழில்நுட்பத்தில் சாத்தியமாகி விட்டால், அதன் மதிப்பு குறைந்து உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version