15 ஆண்டுகளுக்குப் பிறகு நிவின் பாலி – அஜு வர்கீஸ் ஒன்றிணைந்து ‘சர்வம் மாயா’

மலையாள சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படம், நிவின் பாலியும் அஜு வர்கீஸும் திரையுலகில் அறிமுகமான படம் என குறிப்பிடப்படுகின்றது.

இப்போது, அந்த அறிமுக ஜோடி மீண்டும் ஒன்றிணைந்து சர்வம் மாயா என்ற புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இது நிவின் பாலி மற்றும் அஜு வர்கீஸ் கூட்டணியில் உருவாகும் 10-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சர்வம் மாயா படத்தை, பஞ்சுவும் அதுபுத விளக்கும் படத்தை இயக்கிய அகில் சத்யன் இயக்குகிறார். பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடிக்கிறார். இசை சார்ந்த ரொமான்டிக் டிராமா வகை படமாக இது உருவாகி வருகிறது.

இந்த திரைப்படம் 2025 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version