ஹைதராபாத் : இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை மற்றும் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் பெற்றவர் சாய்னா நேவால், தனது கணவர் பாருபள்ளி காஷ்யப்பை விட்டுப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
சாய்னா நேவால் 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்திருந்தார். கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் என்ற பெருமையும், உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த ஒரே இந்திய பெண் பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையும் சாய்னாவுக்குக் கிடைத்துள்ளது.
சாய்னா, முன்னாள் இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சாய்னா நேவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “வாழ்க்கை சில சமயங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நீண்ட யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, நானும் பாருபள்ளி காஷ்யப்பும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். மன நிம்மதி மற்றும் வளர்ச்சிக்காக இந்த முடிவு எடுத்துள்ளோம். எங்கள் தனியுரிமைக்கு மதிப்பு அளித்ததற்கு நன்றி,” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாருபள்ளி காஷ்யப்பிடம் எந்தவொரு பதிலும் இதுவரை வெளிவரவில்லை. குறிப்பிடத்தக்கவகையில், காஷ்யப் 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்