உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தீவிரம் : முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் சுட்டுக்கொலை

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட தீவிர தாக்குதலால் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி உயிரிழந்தார்.

உக்ரைனில் போர் தீவிரமாக நீடித்து வரும் நிலையில், 500க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. தெற்கு உக்ரைனில் நடந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், 28 பேர் படுகாயமடைந்தனர்.

லிவிவ் நகரில் முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் ஆண்ட்ரி பருபி சுட்டுக்கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அங்குள்ள போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இரங்கல் தெரிவித்துள்ளார். குற்றவாளியை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேசமயம், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டிருந்தாலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தாக்குதலை தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version