புதுடில்லி: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் நூற்றாண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று புதுடில்லியில் கோலாகலமாக தொடங்கியது.
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில், ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டிற்கு செய்த பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயம் வெளியிடப்பட்டது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925ஆம் ஆண்டு மகாராஷ்டிரா நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார் தலைமையில் தொடங்கப்பட்டது. கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை மற்றும் சமூக பொறுப்புணர்வை மக்களிடம் பரப்புவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த அமைப்பு, தற்போது நாடு முழுவதும் நூற்றாண்டு கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமூக பணி மற்றும் சேவைகளை வலியுறுத்தினார்.