இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனது அடுத்த தொடர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த அவரின் பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
38 வயதான ரோகித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, 2027 உலகக்கோப்பைக்கான தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது உடல் தகுதி குறித்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், சமீபத்தில் அவர் சுமார் 10 கிலோ எடையை குறைத்து, சிறப்பான ஃபிட்னெஸ்ஸுடன் களமிறங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக ரோகித் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அக்டோபர் 19ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில் ரோகித்துடன் விராட் கோலியும் பங்கேற்கிறார். கோலியும் அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக, கடந்த மே மாதம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர், டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விராட் கோலியும் அதே முடிவை அறிவித்தது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தற்போது இன்ஸ்டாகிராமில் ரோகித் பகிர்ந்துள்ள வீடியோவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் குவிந்துள்ளன.