உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ ஷங்கர்

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பின்னர் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களிடம் தனித்த அடையாளம் பெற்றவர் ரோபோ ஷங்கர்.

‘கலகலப்பு’, ‘மாயா’, ‘அன்னாத்தே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கூ டூப் குக்கூ’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் எலிமினேட் ஆனபோது காட்டிய நகைச்சுவை ரியாக்ஷன்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில், முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரோபோ ஷங்கர், பின் உடல்நலம் மேம்பட்டு சினிமா பணிகளில் மீண்டும் ஆக்டிவாக இருந்தார். ஆனால் தற்போது திடீரென உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பிரச்சனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

Exit mobile version