மீண்டும் குற்றாலத்தில் குதூகலம் தான்..!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி ஆண்டுதோறும் துவங்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு சீசன் முன்கூட்டியே துவங்கிய நிலையில் இங்குள்ள குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து ஜில்லென்று வரும் தண்ணீரில் குளிப்பதற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அருவியில் குளித்த மகிழ்ந்து செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக இன்று ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதன்படி 27 படகுகள் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று துவங்கப்படுகிறது இரண்டு நபர் மிதி படகு அரை மணி நேரத்திற்கு 200 ரூபாயும், நான்கு நபர் மிதி படகு அரை மணி நேரத்துக்கு 300 ரூபாயும், நான்கு நபர் துடுப்பு படகு அரை மணி நேரத்திற்கு 350 ரூபாய் கட்டணமாக சுற்றுலாத்துறை சார்பில் வசூல் செயப்படுகிறது.

மேலும் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்காக லைஃப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது இதனால் அருவிகளில் குளித்து மகிழ்ந்த பின்னர் பொழுதுபோக்குக்காக இன்று முதல் படகு சவாரி துவங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படகு சவாரி துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர்,பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் தென்காசி சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்கள் சுற்றுலாத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்..

Exit mobile version