உத்தராகண்டுக்கு ரெட் அலர்ட் ; கனமழை, நிலச்சரிவு அபாயம்

டேராடூன் : உத்தராகண்டில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாநில அரசு ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் டேராடூன், தெஹ்ரி, பவுலி, ஹரித்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (செப். 2) டேராடூன், உத்தரகாசி, ருத்ரப்பிரயாக், சமோலி, பாகேஷ்வர் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, டேராடூன், தெஹ்ரி, பவுலி, சம்பாவத் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், “வரும் சில நாட்கள் சவாலானதாக இருக்கும். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, நிலச்சரிவு மற்றும் நீர் தேக்கம் போன்ற அவசர நிலைகளை முன்னெச்சரிக்கையுடன் கையாள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

மக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, அதிகாரிகள் முழுநேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version