சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘கூலி’ ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை வழங்கியுள்ளார்.
இந்தப் பிரம்மாண்ட படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது.
இப்படத்திலிருந்து இதுவரை வெளியாகியுள்ள ‘சிக்கிடு’, ‘மோனிகா’, ‘கூலி தி பவர்ஹவுஸ்’ ஆகிய பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ‘பவர்ஹவுஸ்’ பாடல் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா: படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னையில், மிகுந்த விமர்சனத்துடன் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறுவது :
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஸ்ரீ குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது
நடிகர் ஸ்ரீ தற்போது நலமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார். ஒரு நாள் அவர் எனக்கு வீடியோ கால் செய்து, தானே எழுதிய புத்தகத்தை வெளியிடப் போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் நான் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அவரை உதாசீனப்படுத்தினோம் என விமர்சனங்கள் எழுந்தது. இதனால் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து நான் விலகினேன்” எனத் தெரிவித்தார்.
‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே உருவாக்கியுள்ள எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளிவரும் நிலையில், தயாரிப்பு குழு ப்ரோமோஷன் பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றது.