புதிய தொடக்கத்துக்கு கெனிஷாவுடன் ரவி மோகன் மாஸ் என்ட்ரி ! – வைரல் புகைப்படங்கள்

நடிகர் ரவி மோகன் நடிப்பைத் தாண்டி தற்போது தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளார். இதனை ஒட்டி, அவர் தொடங்கிய ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், எஸ்.ஜே.சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள், முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கெனிஷாவுடன் மாஸ் என்ட்ரி

தொடக்க விழாவில் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் கை கோர்த்தபடி அரங்கிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இதற்கு முன்பு, இருவரும் சேர்ந்து திருப்பதி சென்றும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மூன்று படங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பு

‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் மூலம் ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்க ரவி மோகன் திட்டமிட்டுள்ளார். அதில், முதல் படமாக அவர் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் பான் இந்திய அளவில் உருவாகவுள்ளதாகவும், ‘அனிமல்’ படத்துக்கு இசையமைத்த ஹர்ஷவர்த்தன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிப்பு பயணம்

இதற்கிடையே, ரவி மோகன் நடித்துள்ள ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’, ‘பராசக்தி’ போன்ற படங்கள் வரிசையாக வெளிவரவுள்ளன. இதில் ‘ஜீனி’ மற்றும் ‘கராத்தே பாபு’ படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரவிருக்கின்றன.

தற்போது, தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரவி மோகன் யோகிபாபுவை வைத்து ஒரு படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார். மேலும், பிரபல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வரும் நிலையில், அவரின் புதிய முயற்சிக்கு திரையுலகமே பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது.

Exit mobile version