நாட்றம்பள்ளியில் குழந்தைகளுக்கு வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் எலி – பெற்றோர் அதிர்ச்சி

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே உள்ள மல்லகுண்டா கிராமத்தில், குழந்தைகளுக்காக வாங்கிய சிப்ஸ் பாக்கெட்டில் முழு எலி கிடந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது.

கிராமத்தார் தொழிலாளி செல்லப்பாண்டி, தனது குழந்தைகளுக்கு வீட்டின் எதிரே உள்ள டீ கடையில் விற்பனைக்கு வந்துள்ள “ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி” பிராண்ட் நான்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கினார். ஆனால், வீட்டிற்கு வந்ததும், ஒன்றை திறந்தபோது அதில் எண்ணெயில் பொறிக்கப்பட்ட முழு எலி இருந்தது.

இந்த வீடியோ மற்றும் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவுவதால் பெரும் கவனம் பெற்றுள்ளது.

Exit mobile version