வைரலாகும் ராம் சரணின் ஜிம் கிளிக்ஸ்!

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படம் ‘பெத்தி’.

இந்தப் படத்தில் ராம் சரணுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு, அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ‘பெத்தி’ திரைப்படத்திற்காக நடிகர் ராம் சரண் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவர் ஜிம்மில் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடையே ‘Beast Mode On’ என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது. ராம் சரணின் அசாத்திய மாற்றத்தை பாராட்டும் விதமாக இணையத்தில் பரவலான வரவேற்பு உருவாகியுள்ளது.

Exit mobile version