திருச்சியில் மாருதி சிமெண்ட் உரிமையாளர் வீடு மற்றும் ஆலையில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து தத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சாபுதூர் பகுதியில் கரியமாணிக்கம் சாலையில் மாருதி சிமெண்ட் தொழிற்சாலை உள்ளது. திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள கணபதி நகர் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியும், அவரது மகனும் சிமெண்ட் ஆலையை நிர்வாகித்து வருகிறார்கள்.
வரி ஏய்ப்பு, போலி பில்கள் மூலம் சிமெண்ட் விற்பனை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாம்பழச்சாலை பெரியார் நகரில் உள்ள வீடு மற்றும் சமயபுரம் பகுதியில் உள்ள சிமெண்ட் ஆலையிலும் 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் சுப்பிரமணியின் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிலும் வருமானவரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
















