” கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன் ? ” – பிரதமரை விமர்சித்த ராகுல் காந்தி!

பிகானர், ராஜஸ்தான்: ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்தும், தேசிய பாதுகாப்பையும் குறித்து உணர்ச்சி மேம்பட்டு உரையாற்றினார். அவர் உரையில், “பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது பழிவாங்கல் அல்ல; இது தர்மத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது,” எனக் கூறினார்.

மேலும், “இந்திய மக்களின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் நாம் பதிலளித்திருக்கிறோம். என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது,” என்று உணர்வுபூர்வமாக தெரிவித்தார்.

இந்த உரையை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியை நேரடியாக கண்டித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

“மோடிஜி, வெறுமனே உணர்ச்சி பேச்சுகள் போதாது. என்னுடைய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளியுங்கள் :

  1. பயங்கரவாதம் தொடர்பான பாகிஸ்தான் அறிக்கையை ஏன் நம்பினீர்கள் ?
  2. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு பணிந்து, இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள் ?
  3. கேமராக்கள் முன்னால் மட்டுமே உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன் ?

இந்தியாவின் கௌரவத்தை நீங்கள் பலவீனமாக்கி விட்டீர்கள்.”

இவ்வாறு அவர் விமர்சனம் செய்துள்ளாரே தவிர, எதிர்க்கட்சிகளும் மோடியின் உரையை அரசியல் நோக்குடன் கூறப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளன.

Exit mobile version