ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் டிராவிட் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றி வந்த டிராவிட் திடீரென விலகியிருப்பது அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்னர், அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் தனது பதவியிலிருந்து விலகும் எண்ணம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி பரவியிருந்தது.
டிராவிட் விலகியதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமீபத்தில் நடந்த நிர்வாகக் கூட்டத்தில் அவர் முன்வைத்த சில கருத்துகளை அணி நிர்வாகம் ஏற்காததால், அதிருப்தியடைந்த டிராவிட் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கிடையில், டிராவிட் அடுத்த ஐபிஎல் சீசனில் வேறு முக்கிய அணியுடன் இணைய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவரை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டி வருவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.