பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தார் ஆர்.பி. உதயகுமார்

மதுரையில் இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறும் தனியார் மண்டபத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வந்தார். சந்திப்பிற்கு முன்னதாக சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்த அவர், பின்னர் பிரேமலதாவை நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

இருவரும் ஆலோசனைக் கூட்டத்தின் மேடையில் அமைக்கப்பட்ட மரணமடைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வருவதாகும். மேலும், அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து எந்த முடிவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் போது பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டசபைத் தேர்தலில் கட்சி இலக்கை அடையும் வகையில் தொண்டு தொகுதிகளை அதிகரித்து பெரிய கூட்டணி அமைப்போம் என்றும், வரலாற்று சாதனை படைப்போம் என்றும் பேசியிருந்தார்.

Exit mobile version