இந்தியப் பொருட்களை வாங்க வலியுறுத்தும் பிரதமர் மோடி !

புதுடெல்லி : உலக பொருளாதாரம் நிலைமைக்கேற்ப மாற்றம் பெறும் நிலையில், “இந்திய பொருட்களை வாங்குங்கள்” என மக்களிடம் வலியுறுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

அமெரிக்காவில் வரி அதிகரிப்பு காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி தொழில்கள் தாக்கம் பெறும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்திய தயாரிப்புகளுக்கு 25% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதனால் இந்திய ஜவுளித் தொழில் உள்ளிட்ட ஏராளமான உற்பத்தித் துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நெருக்கடியைத் தவிர்க்க அமெரிக்க பொருட்களுக்கான சந்தையை இந்தியா திறக்குமாறு அழுத்தம் தரப்படுகிறதெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேற்கொள்ளப்பட்டால், விவசாயம், பால் உற்பத்தி உள்ளிட்ட உள்நாட்டு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய பொருட்களை வாங்கி உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டியதுண்டு என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

“நாடுகள் தங்களது பொருளாதார நலன்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. உள்நாட்டு பொருட்கள் சந்தையை விரைவாக வளர்க்க தேசிய அளவில் ஒரு இயக்கம் தேவைப்படுகிறது,” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மொத்த வணிகர்கள் முதல் சிறுகடைகள் வரை அனைவரும் இந்திய தயாரிப்புகளையே விற்பதற்கு உறுதி கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளையும் அது எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை பார்த்து, இந்திய தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version