கையில் தாலியுடன் பிரதீப் ரங்கநாதன் !

தமிழ் சினிமாவின் இளம் வசூல் நாயகனாக தன்னை நிலை நிறுத்தியிருக்கும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், தனது 4-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார். ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரண்டும் ரூ.100 கோடி க்ளப் ஹிட் படங்களை தொடர்ந்து, தற்போது அவர் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘DUDE’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் தற்போது ‘PR 04’ என அடையாளம் காணப்படுகிறது. இப்படத்தில் பிரதீப்புடன் மூத்த நடிகர் சரத்குமார் மற்றும் இளம் நடிகை மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கையில் தாலி, முகம் மற்றும் கைகளில் காயங்களுடன் கொடூரமான தோற்றத்தில் பிரதீப் ரங்கநாதன் காட்சியளிக்கிறார். இந்த போஸ்டர், ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் கதையும், பிரதீப்பின் தோற்றமும் புதுமையாக அமைந்துள்ளதால், ‘DUDE’ படம் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Exit mobile version