மக்களுக்கு சேவை செய்ய அரசியல் அதிகாரம் அவசியமில்லை – நடிகர் சிவராஜ்குமார் கருத்து

சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து தொடங்கி விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளனர். இதேபோல் கர்நாடகாவில் உபேந்திரா, ராஜ்குமார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது நீங்கள் ஏன் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை என்ற கேள்வியை ஒரு பத்திரிகையாளர் எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சிவராஜ்குமார், “மக்களுக்கு நல்லது செய்வதற்கு அரசியல் அதிகாரம் அவசியம் என்றில்லை. நடிகராக இருந்துகொண்டே சமூகத்திற்கு உதவி செய்ய முடியும். அதற்காக அரசியலுக்குள் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை,” எனத் தெரிவித்தார்.

மேலும், “இது என்னுடைய தனிப்பட்ட வருமானம். யாரிடமும் பாரபட்சம் இல்லாமல், முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். அதுதான் எனக்கு திருப்தி,” என்றும் அவர் கூறினார்.

சிவராஜ்குமாரின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு, பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version