நெல்லையில் சின்னத்திரை நடிகர் தினேஷ் மீது பணமோசடி, போலீஸ் விசாரணை !

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே விவசாயியிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சின்னத்திரை நடிகர் தினேஷிடம் போலீசார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பணகுடி அருகே தண்டையார் குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வசிக்கும் சீரியல் நடிகர் தினேஷுடன் நட்புறவு கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தினேஷ் கூறி, கருணாநிதியிடமிருந்து ரூ.3 லட்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. மூன்று வருடங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், கடந்த 25ஆம் தேதி வள்ளியூரில் நடந்த ஒரு வழக்கு தொடர்பான வருகையின்போது, தினேஷிடம் பணத்தைப் பற்றி கருணாநிதி கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, தினேஷ் தனது காரில் அழைத்துச் சென்று, தந்தையுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக கருணாநிதி, பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நடிகர் தினேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினேஷின் விளக்கம்
விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், “கருணாநிதியை நான் தாக்கிய நேரத்தில், நான் வேறு ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் இருந்தேன். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இதனை எழுத்து மூலம் போலீசாரிடம் வழங்கியுள்ளேன்,” என்றார். மேலும், மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் தன்னை அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

Exit mobile version