ஜப்பான் பிரதமர் இஷிபாவுக்கு பிரதமர் மோடியின் பரிசு !

டோக்கியோ : ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் அவரது மனைவி யோஷிகோ இஷிபாவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனித்துவமான பரிசுகளை வழங்கியுள்ளார்.

ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு சீனாவுக்கு புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, “ஜப்பான் அரசு மற்றும் மக்களின் அன்புக்கும், இந்த பயணம் இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்திய விதத்திற்கும் என்றும் நன்றியுணர்வு செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வழங்கிய பரிசுகளின் விவரம் வெளியானது. பிரதமர் இஷிபாவுக்கு அளிக்கப்பட்ட பரிசு, ராமன் கிண்ணங்கள் வெள்ளி சாப்ஸ்டிக்ஸுடன் இணைக்கப்பட்டிருந்தன. இந்திய கலைத்திறனை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட நிலவுக்கல் (Moonstone) கிண்ணத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பிரதமர் மனைவிக்கு அளிக்கப்பட்ட பரிசு யோஷிகோ இஷிபாவுக்கு, லடாக்கில் உள்ள சாங்தாங்கி ஆட்டின் மென்மையான கம்பளியால் செய்யப்பட்ட பாஷ்மினா சால்வை வழங்கினார். இச்சால்வை காஷ்மீர் கைவினைஞர்களால் கையால் நெய்யப்பட்டு, லேசானது, மென்மையானது என்ற சிறப்புமிக்கது. பாரம்பரிய தீப்பெட்டி வடிவ பெட்டியில் அழகாக அடைக்கப்பட்டு வழங்கப்பட்டது.

பல நூற்றாண்டுகள் பழமையான காஷ்மீர் கைவினை கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் இச்சால்வை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் பாரம்பரிய கைவினை மற்றும் கலைத்திறனை பிரதிபலிக்கும் இப்பரிசுகள், இரு நாடுகளின் நட்புறவின் சின்னமாக பாராட்டப்பட்டுள்ளன.

Exit mobile version