பாட்னா : தலைநகர் டில்லியிலிருந்து புறப்பட்ட இண்டிகோ நிறுவனத்துக்குச் சேர்ந்த விமானம் ஒன்று, பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட திடீர் சிக்கலால் நூலிழையில் விபத்திலிருந்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இண்டிகோ விமானம் (விண்ணப்ப எண் 6E 2482) நேற்று இரவு 173 பயணிகளுடன் டில்லியில் இருந்து பாட்னாவுக்கு புறப்பட்டது. உரிய நேரத்தில் பாட்னா விமான நிலையத்திற்கு வந்த விமானம், நிர்ணயிக்கப்பட்ட ஓடுபாதைக்கு முந்தியே தரையிறங்கியது.
இதனையடுத்து விமானம் நிற்க ஓடுபாதையின் மீதமுள்ள தூரம் போதுமானதாக இருக்காது என்பதை விமானிகள் உணர்ந்தனர். உடனடியாக வேகத்துடன் விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, வானத்தில் மூன்று முறை சுற்றி வட்டமிட்டனர்.
பின்னர், விமானிகள் எடுத்த விரைவு முடிவால், விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு 173 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து விமான நிலையத்திலும் பயணிகளிடையிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
பாட்னா விமான நிலைய ஓடுபாதை, பிற விமான நிலையங்களுடன் ஒப்பிட்டால் குறுகியதாக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், விமானிகள் செய்த சமயோசிதமான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.