பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : இந்தியா ஆதரவு – பிரதமர் மோடி ஆறுதல்

பிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணத்தில் உள்ள செபு நகரில் நேற்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. தொடக்கத் தகவலின்படி குறைந்தது 69 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், “பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் குறித்து நான் மிகுந்த கவலையடைந்தேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய வேண்டும். இந்த துயரமான தருணத்தில் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவுடன் இருக்கும்” என தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் மக்களுக்கு உலகின் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version