முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆவணி மாதம் முதல் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர், சமீபத்தில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில், மாநிலத்தின் வருவாய் மாவட்டங்களை மையமாகக் கொண்டு மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, அதிமுக தலைமையின் செயல்பாடு, திமுக அரசின் குறைகள், மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை மக்களிடம் விளக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஆடி மாதம் நடைபெற்று வருவதால், ஆவணி மாதம் சுற்றுப்பயணம் தொடங்கப்படும் என்றும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.