இந்தியாவில் 4 நிறங்களில் வழங்கப்படும் பாஸ்போர்ட் – யாருக்கு எந்த நிறம் ?

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு அவசியமான ஆவணங்களில் முக்கியமானது பாஸ்போர்ட் ஆகும். இது அந்நாட்டு அரசால் வழங்கப்படும் அடையாள ஆவணமாகும். உலக நாடுகளுக்கு செல்ல உதவும் இந்த ஆவணம், இந்தியாவில் ஒரே மாதிரியாக இல்லாமல் 4 வித நிறங்களில் வழங்கப்படுகிறது.

நீல நிற பாஸ்போர்ட்

இந்தியாவில் அதிகமாக வழங்கப்படும் பொதுவான பாஸ்போர்ட் நீல நிறத்திலானது. ஓய்வு, படிப்பு, வேலை அல்லது வணிக நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு இது வழங்கப்படுகிறது. தற்போது பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக பயோமெட்ரிக் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டாகவும் வழங்கப்படுகிறது.

வெள்ளை நிற பாஸ்போர்ட்

வெள்ளை நிற பாஸ்போர்ட், வெளிநாடுகளில் பணியமர்த்தப்படும் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கே வழங்கப்படும். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் இதன் கீழ் வருகிறார்கள். குடியேற்றச் சோதனைகளில் விரைவான அனுமதி போன்ற சலுகைகள் இதற்குண்டு.

சிவப்பு நிற பாஸ்போர்ட்

இந்த பாஸ்போர்ட், ராஜதந்திர அந்தஸ்து கொண்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தின் சிலர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமே சிவப்பு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இது விரைவான விசா அனுமதி மற்றும் சில நாடுகளுக்கான விசா விலக்கு போன்ற சலுகைகளை வழங்குகிறது.

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்

2018ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த பாஸ்போர்ட், கல்வித் தகுதி குறைவானவர்களும் (10ஆம் வகுப்பு கீழ்) வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் குடிமக்களும் பயன்படுத்தியது. ஆனால் இது பாகுபாடு ஏற்படுத்தும் என்ற காரணத்தால், அந்த ஆண்டிலேயே ரத்து செய்யப்பட்டது.

உலக நாடுகளில் பாஸ்போர்ட் நிறங்கள்

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிவப்பு நிற பாஸ்போர்ட் பயன்படுத்துகின்றன. முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் பச்சை நிறத்தை விரும்புகின்றன. சில ஆப்பிரிக்க நாடுகள் கருப்பு நிற பாஸ்போர்ட் வழங்குகின்றன. இந்தியா மட்டும் பயண நோக்கம் மற்றும் அரசாங்கப் பொறுப்பு அடிப்படையில் நிறங்களை வேறுபடுத்துகிறது என்பது சிறப்பம்சமாகும்.

Exit mobile version