அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக குற்றம் சாட்டி, பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கூட கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கொங்கு மண்டல நிர்வாகிகள் வலியுறுத்திய நிலையில், அவர் ஆதரவாளர்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி முன்னாள் துணைச் செயலர் மருதமுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஐ.டி. விங் துணைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பை உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் அம்மாபேட்டை மேற்கு ஒன்றியச் செயலர் செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலர் அருள் ராமச்சந்திரன், மாவட்ட ஐ.டி. விங் செயலர் செந்தில் என்கிற கோடீஸ்வரன், சத்தியமங்கலம் நகர ஜெயலலிதா பேரவை இணைச் செயலரும் 24வது வார்டு செயலருமான காமேஷ் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “கட்சியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

















