காதலர்களுக்காக திறந்திருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்கள் : மார்க்சிஸ்ட் சண்முகம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 240 கொலைகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாவது:

“தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு தனியான அரசு ஏற்பாடுகள் இல்லை. எனவே, காதல் திருமணங்களை நடத்திக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் காதலர்களுக்காக திறந்தே இருக்கின்றன.

நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நடந்துள்ளது என்பது பதிவு செய்யப்பட்ட கணக்கே. நிலைமை மிகக் கவலைக்கிடமாக உள்ளது. கொலை செய்தவர்களை கூட சிலர் கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.

இதே நேரத்தில் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலை அரசு பயன்படுத்திக்கொண்டு, ஜாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே முதல்வர் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version