இயற்பியலுக்கான 2025ஆம் ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இவர்கள் ஜான் கிளார்க், மைக்கேல் டிவோரெட் மற்றும் ஜான் மார்ட்டினிஸ் என பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பரிசு, இயற்பியல் துறையில் மனித குலத்திற்கு அற்புதமான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. நோபல் பரிசுகள் ஸ்வீடனில் வேதியியலாளரும் தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக 1901ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.
நோபல் பரிசு விருதுகளுக்கு தங்க பதக்கம், பட்டயம் மற்றும் பண பரிசு ஆகியவை வழங்கப்படுகின்றன. பரிசுகள் ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10 அன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.