நியூயார்க் மேயர் தேர்தல் : இந்திய வம்சாவளி ஜோஹ்ரம் களமிறங்குகிறார்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும் இளைஞருமான ஜோஹ்ரம் மம்தானி (33) ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வரும் நவம்பரில் நடைபெற உள்ள மேயர் தேர்தலை முன்னிட்டு, தற்போதைய மேயர் எரிக் ஆடம் மீண்டும் போட்டியிடவில்லை. இதனையடுத்து, ஜனநாயகக் கட்சியின் சார்பில் பலர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அவர்களில் முன்னாள் நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரிவ் கியுமோவும் இடம்பெற்றிருந்தார்.

இந்தியாவைச் சேர்ந்த ஜோஹ்ரம் மம்தானி, 2021ம் ஆண்டு நியூயார்க் மாநில சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் தாய் பிரபல இயக்குநர் மீரா நாயர், ‘சலாம் பாம்பே’, ‘காமசூத்ரா: ஏ டேல் ஆப் லவ்’ உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கியவர். இவரின் தந்தை மஹ்மூத் மம்தானி, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சமீபத்தில், மேயர் பதவிக்கான வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கல் செய்த ஜோஹ்ரம், புதுமையான பிரசார யுக்திகளை பயன்படுத்தினார். குறிப்பாக பாலிவுட் வசனங்களை அடிப்படையாகக் கொண்ட பிரசார வீடியோக்கள் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இதன் விளைவாக, ஜனநாயகக் கட்சி நடத்திய முதன்மை தேர்தலில் ஜோஹ்ரம், ஆண்ட்ரிவ் கியுமோவை விட 40 சதவீதம் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம், நியூயார்க் நகரின் மேயர் பதவிக்கு போட்டியிடும் முதல் முஸ்லிம் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் என்ற பெருமையை ஜோஹ்ரம் மம்தானி பெற்றுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலில் அவர் குடியரசு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கர்ட்டிஸ் ஸ்லிவாவை எதிர்த்து மோதவிருக்கிறார்.

Exit mobile version