நாமக்கல் வாசவி கிளப் போர்ட் டவுன் அமைப்பின் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் வாசவி மகாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த அமைப்பின் புதிய தலைவராக ஜெ.நாகஹரிஸ்குமார், செயலாளராக பி.மனோஜ், மற்றும் பொருளாளராக டி.தினேஸ்குமார் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான பதவியேற்பு விழாவிற்குச் சர்வதேச வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் ஏ.வெங்கடேஸ்வரகுப்தா தலைமை தாங்கி, புதிய நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்து உரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக:சர்வதேச வாசவி கிளப் துணைத் தலைவர் என்.பலராமன் கூடுதல் பொருளாளர் எஸ்.சத்ய நாராயணன் நாமக்கல் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி சத்திரம் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் பி.தாசப்பன் செட்டியார் ஆகியோர் கலந்துகொண்டு, வாசவி கிளப்பின் சேவைப் பணிகள் மற்றும் சமூக மேம்பாடு குறித்துச் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, நாமக்கல் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி சத்திரம் டிரஸ்ட் நிர்வாகிகள், வாசவி கிளப் சார்பில் கௌரவிக்கப் பட்டனர். விழாவின் ஒரு பகுதியாக நலிந்த நிலையில் உள்ள பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கேபினட் செயலாளர் எம்.வசந்தி, பொருளாளர் வீ.ரேவதி, துணை ஆளுநர்கள் எஸ்.ஸ்ரீமதி வாசன், எம்.சதீஷ்குமார், சர்வதேச நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹரிஹர வெங்கட்ராமன், மண்டலத் தலைவர்கள் பி.லட்சுமி பிரியா, டி.சந்தியா மற்றும் மண்டலச் செயலர் எஸ்.ஹரிராம் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

















