தொடரும் வன்முறை, தீவிர போராட்டம் – ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி

காத்மாண்டு: நேபாளத்தில் சமூக வலைதளத் தடையை எதிர்த்து வெடித்த போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும் அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என நேபாள அரசு உத்தரவிட்டது. ஆனால், எந்த நிறுவனமும் பதிவு செய்ய முன்வராததால், கடந்த 4ஆம் தேதி நேபாளத்தில் மொத்தம் 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “தடை செய்ய வேண்டியது ஊழலை; சமூக வலைதளங்களை அல்ல” என முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், நேற்றுமுதல் காத்மாண்டுவில் பரவலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழலில் சிக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது. நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டதோடு, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இன்றும் போராட்டம் கட்டுக்கடங்காமல் வெடித்த நிலையில், பிரதமர் ஒலியின் இல்லம் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டது. இந்நிலையில், தொடரும் பதற்றமான சூழ்நிலையால், நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Exit mobile version