NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம் : டிடிவி தினகரன்

NDA கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் வெளியேறிய முக்கிய தலைவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தனது கோரிக்கை 10 நாட்களில் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து முடிவெடுப்போம் என அவர் எச்சரித்தது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,
“அரசியலை நான் வியாபாரமாக பார்க்கவில்லை. எங்களை ஒரு துக்கடா கட்சியாக பாஜக நினைத்தது. யாரை எதிர்த்து நாங்கள் கட்சி தொடங்கினோம் என்பதை பாஜக அறிவதே தெரியும். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. எங்களை கூட்டணிக்கு அண்ணாமலைதான் கொண்டு வந்தார். அவரைப் போலவே வெளிப்படையான நபர் அவர். ஆனால், தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் NDA கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரனே காரணம். பன்னீர்செல்வம் தொடர்பான அவரது செயல்பாடு எனக்கு மனவருத்தத்தை அளித்தது. மேலும், NDAவில் அதிமுக இணைந்தது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே. புதிய கூட்டணிகள் உருவாகும், வெற்றிபெறும் கூட்டணியில் நிச்சயம் நாங்கள் இருப்போம்,” என்று தெரிவித்தார்.

Exit mobile version