ஜார்க்கண்டில் நக்சலைட் துப்பாக்கிச்சண்டை : 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம், ஒருவர் காயம்

ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் நக்சலைட்டுகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது.

பலாமு மாவட்டத்தில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த வேளையில், நக்சலைட்கள் திடீரென பாதுகாப்புப் படையினர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், இரு வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.

மற்றொரு வீரர் காயமடைந்து உடனடியாக மெதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

“நக்சலைட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில், எங்கள் படையினருக்கு குண்டுக் காயம் ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version