ஆந்திரபிரதேசம் சித்தூர் மாவட்டத்தின் அருகில் நாராயணவனம் எனும் ஊரில் ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த நாராயவனம் என்ற ஊர் ஒரு காலத்தில் கார்வெட்டிநகர் சூரியவம்ச ராஜாவின் தலைநகராக இருந்தது . இந்த இடத்தில் தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் பெருமாள் பத்மாவதி தாயாரை திருமணம் செய்தார்.
இப்பகுதியை ஆண்ட ஆகாசராஜாவுக்கு மகளாக தாயார் பிறந்தார் . அவர் பெருமாளின் அழகில் மயங்கி அழவழைn திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்கு பின் பத்மாவதி தாயாரின் சகோதரர் இந்த கோயிலை கட்டினார். இக்கோயிலில் இன்றும் பத்மாவதி தாயார் தன் திருமணத்திற்காக மாவு அரைத்த இயந்திர கல் இன்றும் உள்ளது .
இக்கோயிலில் திருப்பதி பெருமாள் கோயிலில் நடைபெறுவது போல் பெருமாளின் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது , இக்கோயிலானது திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது .
ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கும், ஆகாச ராஜுவின் மகள் ஸ்ரீ பத்மாவதி அம்மாவுக்கும் இங்கு திருமணம் நடந்தது. நாராயணவரத்தில் திருமணம் நடந்ததால், பத்மாவதியின் சகோதரர் இரண்டு கோயில்களைக் கட்டினார்;

இந்த நிகழ்வின் நினைவாக ஒன்று இங்கே, மற்றொன்று திருமலையில் உள்ளது. ஒரே வளாகத்தில் பத்மாவதி தேவியுடன் வெங்கடேஸ்வர ஸ்வாமி இருவரையும் தரிசிக்கக்கூடிய சில கோவில்களில் இதுவும் ஒன்று.
ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில் – துணை கோவில்கள் இக்கோயிலில ;ஸ்ரீ பத்மாவதி, ஆண்டாள், ஸ்ரீ பிரயாகா மாதவ ஸ்வாமி மற்றும் ஸ்ரீ வரதராஜ சுவாமி ஆகிய நான்கு சிறிய சன்னதிகள் உள்ளன.
கருவறையின் முன் நுழைவாயிலில் சிறிய கருடாழ்வார் சந்நிதி உள்ளது. இவை தவிர, பிரதான கோயிலுக்கு மேலும் ஐந்து கோவில்கள் உள்ளன. இவை ஸ்ரீ பராசரேஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி, ஸ்ரீ சக்தி விநாயக சுவாமி, ஸ்ரீ அகத்தீஸ்வர ஸ்வாமி மற்றும் ஸ்ரீஅவனகஷ்ம்மா ஆகிய சன்னதிகள் உள்ளன.
கோயில் அமைந்துள்ள நாராயணவனம் ஒரு சிறிய கிராமம் ஆகும் . இக்கோயில் மிகவும் நன்றாக பராமரிக்கப்படுகிறது .கோயில் கோபுரம் 7 அடுக்கு உயரம் கொண்டது. இக்கோயிலுனுள் ஆண்டாள் நாச்சியார் , சீதா லக்ஷ்மனனோடு ராமர் சன்னதி மற்றும் ரெங்கநாதர் சன்னதி உள்ளது .