பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அரசியல், தொழில், சினிமா உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும், வீடியோவொன்றை வெளியிட்டு பிரதமர் மோடிக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது :
“இன்று 145 கோடி இந்தியர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான நாள். நம் நாட்டின் மிகவும் மதிக்கப்படும், அன்புக்குரிய பிரதமர் நரேந்திர பாய் மோடி அவர்கள் 75வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
முதலில் குஜராத்தை பொருளாதார வலிமை பெற்ற மாநிலமாக மாற்றிய அவர், இன்று இந்தியாவையே உலக வல்லரசாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். நமது பிரதமரின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கும், நாட்டை சிறந்த தேசமாக மாற்றும் அவரின் பயணம் தொடர வேண்டும் என்பதற்கும் நான் பிரார்த்திக்கிறேன்.
மோடிஜியை மூன்றுக்கும் மேற்பட்ட தசாப்தங்களாக நெருக்கமாக அறிந்து வந்தது எனக்கொரு பெரும் பாக்கியம். இந்தியா மற்றும் இந்தியர்களின் எதிர்கால நலனுக்காக இவ்வளவு tireless-ஆக உழைத்த தலைவரை நான் பார்த்ததே இல்லை” என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.