லண்டன் : ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில், இந்திய அணி மீண்டும் ஒரு முக்கிய தருணத்தில் தவறு செய்து போட்டியை இங்கிலாந்து பக்கம் தள்ளியுள்ளது.
374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 137 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, அதற்குப் பிறகு அபாரமாக முன்னேறியது. முக்கிய காரணம் – ஹாரி ப்ரூக்கின் சதம்.
மிக முக்கியமான தருணத்தில், ஹாரி ப்ரூக் 19 ரன்களில் இருந்தபோது, பவுண்டரி லைனில் லாங்-லெக்கில் பீல்டிங் செய்த முகமது சிராஜ், அவரின் கையில் விழுந்த பந்தை கைப்பற்றினார். ஆனால் பேலன்ஸ் இழந்த சிராஜ், தனது வலது காலை பவுண்டரி குஷனில் வைத்ததால் அது கேட்சாகும் பதிலாக ‘சிக்சர்’ ஆக மாறியது.
இதனால் மேடையில் இருந்த பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மிகுந்த விரக்தியில் மூழ்கினார். அதன்பின்னர் அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக், 98 பந்துகளில் 111 ரன்கள் விளாசி இங்கிலாந்து அணியின் நிலையை வலுப்படுத்தினார்.
இந்த தவறுக்காக, முகமது சிராஜ் தனது தோழர் பிரசித் கிருஷ்ணாவிடம் நேரில் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.