திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் தலைமையில், மதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் அனீஸ் பாபு, முகமது இஸ்மாயில், கரீம் ஹஜ்ரத், சர்க்கரை ஹஜ்ரத், ஹாரிஸ் முகமது, நிஜாமுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுக கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
இதில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், பகுதி செயலாளர்கள் மோகன், வி.டி. ராஜன், சேசு, இக்பால், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதி செல்வராஜ், வார்டு செயலாளர் முகமது அப்துல்லா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சி.என். நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் அப்துல் மாலிக், சர்புதீன், வெங்கிடு, நைனார் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த இணைப்பு, மாவட்ட அரசியல் சூழலில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்கது என்று கூறப்படுகிறது.
