உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை, மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்து கலந்துரையாடினார்.
மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், செப்டம்பர் 9 முதல் 16 ஆம் தேதி வரை அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் இன்று வாரணாசி சென்றார்.
இதற்காக பிரதமர் மோடி உத்தரப்பிரதேசம் வந்தபோது, கவர்னர் அனந்திபென் படேல் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் இணைந்து அவரை வரவேற்றனர். பின்னர், வாரணாசி நகருக்கு கார் மூலம் சென்ற பிரதமர் மோடிக்கு உள்ளூர்வாசிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். நகரின் முக்கிய பகுதிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த சூழலில், மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம், பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
இதைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். மாலை 4.15 மணிக்கு டேராடூன் நகரை அடையும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு, மாலை 5 மணியளவில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.