திருமணத்திற்கு பின் உறவு.. காதலியின் வாயில் வெடி மருந்து திணித்து கொடூரமாகக் கொலை

மைசூர்:
கர்நாடக மாநிலம் மைசூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது உறவுக்கார இளைஞரால் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைசூர் மாவட்டம் ஹுன்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரக்ஷிதா (20). சமீபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் செய்து கொண்டார். எனினும், திருமணத்துக்கு பின், ரக்ஷிதாவிற்கு அவரது உறவுக்காரரான சித்தராஜு உடன் நெருக்கமான தொடர்பு நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இருவரும் ஹிர்யா கிராமத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபோது, அவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சித்தராஜு, தன்னிடம் இருந்த வெடி மருந்தை ரக்ஷிதாவின் வாயில் திணித்து வெடிக்க வைத்ததாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில், ரக்ஷிதாவின் முகம் சிதறி, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சித்தராஜுவை அங்கிருந்தோர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ரக்ஷிதாவின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காதலியின் வாயில் வெடி மருந்து திணித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version