‘லோகா’ படத்தின் அடுத்த பாகத்தில் மம்மூட்டி நடிக்க வாய்ப்பு : துல்கர் சல்மான் அறிவிப்பு

திரையுலகில் தந்தை–மகன் ஜோடி மீண்டும் ஒன்றாகும் நேரம் நெருங்கி வருவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, நஸ்லன், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் ஆகியோர் நடித்த ‘லோகா சாப்டர் 1’ கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த மலையாள சூப்பர் ஹீரோ படம், உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.

ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்த இந்தப் படத்தை ‘நடிகர் வெபரர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால், இதன் தொடர்ச்சிப் பாகங்கள் வருங்காலத்தில் உருவாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘லோகா’ குறித்து பேசிய துல்கர் சல்மான், “படத்தின் செலவு திட்டத்தை விட இரு மடங்கு அதிகரித்தது. அதை அறிந்ததும் அப்பா (மம்மூட்டி) சிறிது பதற்றமடைந்தார். ஆனால் எதிர்காலத்தில் லோகா தொடரின் ஏதாவது ஒரு பாகத்தில் அவரும் நடிக்க வாய்ப்பு உள்ளது. என் தந்தையுடன் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்,” என தெரிவித்தார்.

துல்கர் சல்மான் நடித்துள்ள புதிய படம் ‘காந்தா’ வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version