சென்னை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பு பணிக்காக ரூ.4,000 கோடி மதிப்பில் வெளியிடப்பட்ட டெண்டரில், விதிமீறல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கையில், “சென்னை குடிநீர் வாரியம், நகராட்சி ஆகியவற்றில் முன்பே தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் ஊழல் நடந்தது என்று நாம் சொன்னோம். இப்போது அதைவிட பெரிய முறைகேடு செய்யப்படுகிறதே தெரிய வருகிறது” என்று கூறியுள்ளார்.
டெண்டர் நீட்டிப்பு மீது சந்தேகம்
சென்னை மாநகராட்சியின் 4 மற்றும் 8-ம் மண்டலங்களில் வீடு வீடாக குப்பை சேகரிக்கும் பணிக்கான 10 ஆண்டு ஒப்பந்தத்துக்கு ஜூலையில் டெண்டர் அழைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4,000 கோடி.
கடைசி நாள் நவம்பர் 20 மாலை 3 மணி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்று நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பித்திருந்தன.
ஆனால், நேரம் முடிந்த ஐந்து மணிநேரத்திற்கு பின், மாலை 4 மணி கழித்து, டெண்டர் சமர்ப்பிக்கும் காலம் ஒரு நாள் கூடுதல் நீட்டிக்கப்பட்டதாக அண்ணாமலை கூறுகிறார். இந்த நீட்டிப்புக்குப் பிறகு மேலும் ஒரு நிறுவனம் போட்டியில் இணைந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று நிறுவனங்களின் புள்ளி விவரங்களை பார்த்த பிறகு, விரும்பிய நிறுவனத்திற்கு சாதகமாக புள்ளியை மாற்றிக் கொள்ள இந்த நீட்டிப்பு செய்திருக்கலாம் என அண்ணாமலை சந்தேகம் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்திற்கு பிறகு டெண்டரை நீட்டிப்பது முழுமையான விதிமீறல் என்றும் அவர் கூறினார்., ஒப்பந்தம் ரத்து செய்ய வேண்டும், இவ்வளவு பெரிய மதிப்புள்ள டெண்டரில் வெளிப்படைத்தன்மை குலைந்துள்ளதாக அண்ணாமலை கூறி, இந்த நீட்டிப்பு யார் உத்தரவினால்?, நேரம் தாண்டி போட்டியிட்ட நிறுவனம் யாரது? பின்னணியில் யார்?
என்பதை விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.













