மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு : “பதிவுகளை நீக்க மாட்டேன்” – ஜாய் கிரிசில்டா தெளிவுரை

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட கருத்துகள் பெரும் கவனம் பெற்றன.

இந்த கருத்துகள் காரணமாக, தனிப்பட்ட விவகாரத்தில் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்புபடுத்தப்பட்டதால், 15 நாட்களில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “மாதம்பட்டியை குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என்று குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது. மேலும், நான் பதிவிட்ட கருத்துகளை எந்த சூழலிலும் நீக்கப்போவதில்லை,” என்று ஜாய் கிரிசில்டா தரப்பினர் வாதாடினர்.

இதற்கிடையில், அவதூறு கருத்துகளை வெளியிடுவதற்கு தடை விதிக்கவும், சமூக வலைதள வீடியோக்களை நீக்கவும் மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தொடர்ந்த வழக்குகள் வரும் 24 ஆம் தேதி ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Exit mobile version