முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், திரைப்பட நடிகருமான மு.க.முத்து இன்று (ஜூலை 19) காலை உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரின் மறைவால் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளத
1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மு.க.முத்து, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையா விளக்கு, இங்கேயும் மனிதர்கள், பூகாரி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். தனது சொந்த குரலில் பாடல்களையும் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். குறிப்பாக, 2006ஆம் ஆண்டு வெளியான மாட்டுத்தாவணி படத்தில் இசையமைப்பாளர் தேவா இசையில் ஒரு பாடல் பாடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார்.
மரணத் தகவல் வெளியாகியதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க.முத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, சென்னை கோபாலப்புரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் மு.க.முத்துவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் தனது அண்ணன் மு.க.முத்துவின் உடலுக்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்