இலங்கை நாடாளுமன்றத்தில் LGBTQ விவாதம் : MP இராமநாதன் அர்ச்சுனா எதிர்ப்பு

யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 26 அன்று நடந்த விவாதத்தில், யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா LGBTQ சமூகத்திற்கு எதிரான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது, “இலங்கை பல மதச் சமூஹங்களும், மொழிச் சமூகவும் அழகாக இணைந்து வாழ்ந்து வந்த நாடு. ஆனால் தற்போதைய அமைப்புப் மாற்றத்தால் நாடு LGBTQ நாடாக மாறிவருகிறது. இது நாட்டின் பாரம்பரியத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அர்ச்சுனா மேலும், “இலங்கை, இந்தியப் பெருங்கடலின் முத்து என்று அழைக்கப்படும் நாட்டு பெயர் உலக நாடுகளில் ஒரு மதிப்புக்குரியது. ஆனால் சுற்றுலாத்துறை LGBTQ-க்கு ஆதரவான அறிக்கைகள் வெளியிட்டால், எதிர்காலத்தில் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி அதிகாரிகள் இதனை ஊக்குவிக்கும் விதமாக செயல்படுவார்கள்” என்று பதிப்பிட்டார்.

இதற்கு முந்தையதாக, இலங்கை சுற்றுலாத்துறை “ஈக்குவல் கிரௌண்ட்” அமைப்புடன் இணைந்து, LGBTQ சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டை பாதுகாப்பான, அனைவருக்கும் வரவேற்கக்கூடிய இடமாக மாற்றும் திட்டத்தை அறிவித்தது. இந்த சூழலில், இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்து இலங்கையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version